நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது. இதனை விமர்சித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “விஜய்யின் பேச்சு, அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது” என்றார்.