திருவாரூர் மாடன்நகரில் வீட்டிலிருந்து துர்நாற்றம்-முதியவர் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மாடன் நகரில் உள்ள குணா காலனியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து முதியவர் செந்தில்குமார் என்பவர் கடந்த 15 மாதங்களாக வசித்து வந்தார். இவர் திண்டுக்கல் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் சிவ பக்தரான இவர் மன்னார்குடியில் உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வீட்டில் இவர் மட்டுமே தங்கியிருந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மன்னார்குடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி நகர போலீசார் வீட்டின் உள்ளே பார்த்த போது முதியவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.