நண்பரின் திருமண மேடையில் சுருண்டு விழுந்து இளைஞர் பலி

81பார்த்தது
ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் பெனுமடா கிராமத்தில் நண்பரின் திருமண விழாவிற்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அங்கு, திருமண மேடையில் ஏறிய அவர்கள், நண்பருக்கு பரிசு வழங்கினர். அப்போது வம்சி என்ற இளைஞருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக நண்பர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வம்சி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி