ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொடூரதாக்குதல் சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு திருவாரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பிரதான கோரிக்கையாக நேற்று ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொலைவெறிதாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, நீதிமன்றத்தை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாளையும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என குறிப்பிடத்தக்கது.