
பக்தர்களால் திக்கு முக்காடிய திருத்தணி கோவில்
நாட்டின் 76வது குடியரசு தின விழா நேற்று ஜனவரி 26 கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக திருத்தணி முருகன் மலை கோவிலுக்கு இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பல மணி நேரம் காத்திருந்து மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். கட்டணம் செலுத்தி தரிசனம் செய்வதிலும் நீண்ட வரிசை காத்திருந்ததால் பக்தர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்தில் குவிந்ததால் விளைந்த குறைவால் நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.