பொன்னேரி: பாமக சார்பில் ஆலோசனை பொதுக்குழு கூட்டம்

78பார்த்தது
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநில மாநாடு வருகிற டிசம்பர் 21ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெறுவதை ஒட்டி மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ள நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜனப்பன் சத்திரம் யுவஸ்ரீ மஹால் திருமண மண்டபத்தில் ஆலோசனை பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாநிலத் தலைவர் கோ. ஆலயமணி அறிவுறுத்தலில் இ.வே. வேலுச்சாமி மாநிலச் செயலாளர் முன்னிலை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் வி.எம். பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி, சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் வெள்ளத்தில் விவசாயம் சேதம் ஆகி உள்ளது, கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நடந்துள்ளன. 

ஆனால் இன்றுவரை தமிழக அரசால் உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆனால் பாண்டிச்சேரியில் உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதாகவும், திருவள்ளூரில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்

தொடர்புடைய செய்தி