திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில் குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு உடலை மீட்டு போலீசார் விசாரணை
திருவள்ளூர்
மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் சன்னதி தெருவை சேர்ந்தவர் காந்தராஜ் வயது(42). விவசாயி.
இவர் நேற்று இரவு வீட்டிற்கு வரவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்த நிலையில் அங்குள்ள திருப்பாலீஸ்வரர் ஆலயத்தின் தெப்பக்குளத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகப்பட்டு காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.
அங்கு வந்த பொன்னேரி தீயணைப்புத் துறையினர் இரவு விரைந்து வந்து தெப்பக்குளத்தில் படகுகள் மூலமாகவும் தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி தேடி
வந்தனர். ஆனால்
இரவு ஆழம் அதிகமாக இருந்த காரணத்தினால் காந்தராஜை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது
அதன் பின் இன்று காலை மீண்டும் தொடர்ந்து தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு காந்தராஜின் உடலை குளத்தில் இருந்து மீட்கப்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து
இது குறித்து திருப்பாலைவன காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி காந்தராஜ் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.