திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் இன்று (ஜன.24) நடைபெற்றது.
திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளரும், அமைச்சருமான ஆவடி நாசர் கலந்துகொண்டு ஆற்ற வேண்டிய கழகப்பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்வில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து லெனின் கோபி, சமூக வலைத்தளத்தை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இளமாறன் புதிய நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினர்.