திருவள்ளூர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்கள் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம். நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கமான புழல் நீர்த்தேக்கத்தில் உபரி நீர் ஆயிரம் கனஅடியாக வெளியேற்றம். நீர்வரத்து தற்போது 550 கனஅடியாக குறைந்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2521 மில்லியன் கனஅடி நீர் திறப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 35 அடியில் தற்போது 33 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 7320 கனஅடியாக குறைந்துள்ளது. உபரி நீர் வெளியேற்றம் 8,527 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2866 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.
நீர்வரத்து வினாடிக்கு 1700 கனஅடியாக குறைந்தது. உபரி நீர் வெளியேற்றம் 3000 கனஅடியாக உள்ளது. சோழவரம் நீர்த்தேக்கம் அதன் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடியில் தற்போது 336 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதன் மொத்த உயரம் 18.86 அடியில் 8.58 அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 209 கனஅடியாகவும், குடிநீருக்காக 120 கனஅடி அனுப்பப்படுகிறது.