பொன்னேரி: கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

68பார்த்தது
பொன்னேரி: கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பூங்குளம் ஊராட்சியில் வசிக்கும் ரெட்டிபாளையம் பகுதி மக்கள் எஸ்சி எஸ்டி பழங்குடியின மக்களான தங்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசு சார்பில் உரிய இடம் வழங்கக்கோரி குடும்பத்தினருடன் வந்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்த தகவல் அறிந்து வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். கோட்டாட்சியர் வா.கே. சங்கேத் பல்வந்திடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி