திருவள்ளூர்: 100 நாள் பணி வழங்காததை கண்டித்து சாலை மறியல்

68பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் நாலூர் ஊராட்சி அக்கரம்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணி வழங்கவில்லை குடிநீர் முறையாக விநியோகிக்கவில்லை என கூறி பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மீஞ்சூர் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர். அப்போது தங்களுக்கு முறையாக மணி வழங்க வேண்டும், குடிநீர் விநியோகம் சீராக வழங்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி