மீஞ்சூர்: வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள்

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் அருகே உள்ள அபிராமிபுரம் செஞ்சியம்மாள் நகர் உள்ள இருளர்கள் குடியிருப்பில் 10 வருடங்களுக்கு முன்னால் பிரதம மந்திரி நிதியின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் கட்டி பத்து வருடம் ஆகிறது. இதுவரை எங்களால் இந்த வீட்டில் குடியேற முடியவில்லை. காரணம் இதைக் கட்டியவர்கள் சரியான முறையில் நல்ல பொருட்களை வைத்து கட்டவில்லை. அதனால் பூச்சு வேலை கூட செய்யாமல் அப்படியே இவர்களிடம் கொடுத்து விட்டு சென்ற கான்ட்ராக்டர் இவர்களுக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 20,000 ரூபாயும், தமிழ்நாடு அரசின் சார்பாக 50,000 ரூபாயும் வீடு கட்டுவதற்காக நிதியாக கொடுக்கப்பட்டது. 

ஆனால் இந்த நிதியை வைத்து வீடு கட்ட இயலாது என்பதால் அந்த நிதியில் வீடு கட்டித் தருவதாக கூறிய கான்ட்ராக்டர் இடம் இவர்கள் தங்களுக்கு வந்த நிதி முழுவதையும் குறிப்பாக ஏடிஎம் கார்டு கூட அவர்களிடம் கொடுத்து விட்டதாக கூறுகின்றனர். அப்படி அந்த நிதியை எடுத்து அவர்கள் கட்டிய வீடு தான் இந்த இருளர் குடியிருப்பு முழுவதும் சரியான முறையில் கட்டாமல் பூச்சு வேலை கூட செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். மேலும் கூடுதலாக பணம் தேவைப்படுவதால் அதை தந்தால் முழுவதும் சரியான முறையில் கட்டுவதாக கான்ட்ராக்டர் கூறியதாக கூறினர். அதற்கு எங்களிடம் பணம் இல்லை, இது குறித்து நாங்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி