நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு ‘இரவு வான் பூங்கா’ அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முதற்கட்டமாக ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இரவு வான் பூங்கா நிறுவுவதன் மூலம் ஒளி மாசுபாடு குறையும், விலங்குகளுக்கு இணக்கமாக பூங்காவாக இருக்கும், மின்சார விளக்குகளின் பயன்பாடுகளை குறைத்து இரவு வானத்தில் நட்சத்திரங்களை பார்ப்பதை இது அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.