திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலைய இடத்தை சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் நேரில் வந்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த குப்பைக் கிடங்கை பார்வையிட்டார்.
பேருந்து நிலையம் அமைப்பதற்கு அருகில் உள்ள குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்தவும், மற்றும் சுகாதாரத் தீங்கு விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு இக்குப்பைக் கிடங்கு துர்நாற்றம் வீசும் வகையில் உள்ளது. பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஆபத்தும் ஏற்படும் வகையிலும் உள்ளது. இந்தக் குப்பைக் கிடங்கு சாலையோரம் இருப்பதால் காற்று அதிகவேகம் வீசும்போது வாகன ஓட்டிகள் மீது குப்பை விழுவதாகவும், இதனால் சாலை விபத்துக்கள் அப்பகுதியில் அடிக்கடி ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் வேறு இடத்திற்கு இந்தக் குப்பைக் கிடங்கை கொண்டு செல்ல வேண்டும். பின்பு தான் பேருந்து நிலையத்திற்கு இடத்தை உறுதி செய்யப்படும் என தெரிவித்தார் சப் கலெக்டர். பேரூராட்சி செயல் அலுவலர் அபூபக்கர் இடம் விளக்கம் கேட்டார். துணைத் தலைவர் சுகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.