ஆவடி: கனமழை பாதித்த பகுதியில் களத்தில் ஆவடி ஆணையர்
கனமழை பாதித்த பகுதியில் களத்தில் இறங்கிய ஆவடி காவல் ஆணையர் சங்கர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள புழல் சோழவரம் செங்குன்றம் மீஞ்சூர் மணலி காட்டூர் சாத்தங்காடு மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டு சாலைகள் சேதம் அடைந்த பகுதிகளிலும் மழை நீர் தேங்கிய இடங்களிலும் ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமையும் மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த அவர் தண்ணீரை வெளியேற்றுவதற்கான அறிவுரைகளை காவல்துறையினருக்கு வழங்கினார் அதேபோன்று மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நல்லூர் சுங்கச்சாவடி மணலி புதுநகர் காவல் நிலையம் செல்லும் சாலை அய்யா வைகுண்டர் கோவிலுக்கு செல்லும் சாலை கொசுத் தலை ஆறு பழைய நாப் பாளையம் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்ததை பார்வையிட்ட அவர் காவல்துறையினருக்கு போக்குவரத்து பாதிக்காத வண்ணம் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வருவாய்த்துறையினர் உதவியுடன் அகற்றும் படி காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.