காலதாமதத்திற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

53பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024க்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10தேதி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஓட்டப்பந்தயம், நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, கபடி, ஆக்கி, பளு தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா. மு. நாசர் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சா. மு. நாசர் 2 மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக நிகழ்ச்சிக்கு வந்ததால் அவர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி