திருவள்ளூர் மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வருகை தர உள்ளார். இதன் காரணமாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து சிறுபான்மை துறை அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பட்டாசு கட்டாயம் வெடிக்க கூடாது என அமைச்சர் நாசர் கட்சியினருக்கு உத்தரவிட்டார். மேலும் எந்த வகையில் எல்லாம் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, பதாகைகள் தயார் செய்வது, விளம்பரம் செய்வது உள்ளிட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து வந்திருந்த நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதாக பேச துவங்கினார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் சற்று ததும்பிய அமைச்சர் நாசர் பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார். தொடர்ந்து பேசுகையில் தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய நிலையில் கட்சிக்கும் முதல்வருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன் , பாதியில் விட்ட பணிகளை மீண்டும் செய்து கொடுப்பேன் என உறுதி அளித்தார். தொடர்ந்து பேசுகையில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே முதல்வர் செய்துள்ள பல்வேறு நலதிட்ட்டங்கள் மூலமாக வாக்குகள் நமக்கு கணிசமாக வாக்குகள் கிடைக்கும். எனினும் முதல்வர் கூறிய படி 200 தொகுதிகளை வெல்ல வேண்டும். குறிப்பாக ஆவடி, பூந்தமல்லி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.