ஆவடி - Aavadi

பட்டாபிராம்: டைடல் பார்க்கை திறந்து வைத்த முதல்வர்

பட்டாபிராம்: டைடல் பார்க்கை திறந்து வைத்த முதல்வர்

ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் ஐடி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் வகையில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியில் 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் முயற்சியில் தமிழகத்தின் மூன்றாவது டைட்டில் பார்க் 11 ஏக்கர் நிலப்பரப்பில் 5.50 லட்சம் சதுர அடியில் ₹279 கோடி மதிப்பீட்டில் 21 தளங்களைக் கொண்ட ஒரே கட்டிடமாக கட்டப்பட்டு வந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.  கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடிவடைந்து, டைட்டில் பார்க்கில் அலுவலகங்கள், கட்டடங்களுக்கான அறை, உணவகம் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. கடந்த 9ம் தேதி டிட்கோ மேலாண்மை இயக்குனர் சந்திப் நந்தூரி தலைமையில் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, திறப்பு விழா ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இந்த டைட்டில் பார்க் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பட்டாபிராம் டைட்டில் பார்க்கில் அமையும் தொழில்நுட்ப நிறுவனங்களால் 6000க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும், மேலும் மறைமுகமாக ஆயிரக்கணக்கானோர் இதன் மூலம் பயனடைவர்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా