திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பம்மது குளம் அரசினர் உதவி தொடக்கப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர். நெல் அரிசி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள், நாடோடிகள் எனப்படும் சாட்டை அடிப்பவர்களின் குழந்தைகள், காட்டு நாயக்கன் கோட்டை பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகள், சென்னையிலிருந்து புலம் பெயர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகள் என 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அந்த பள்ளியில் கல்வி கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளியில் மாணவர்கள் குறைந்ததை அடுத்து 566 மாணவர்கள் பள்ளியில் பயின்று வருவதாக கூறிய நிலையில் வெறும் 219 மாணவர்களே பயின்று வருகின்றனர். இதில் கூடுதலாக 167 மாணவர்களுக்கு பள்ளியில் பயில்வதாக கூறி அட்டனன்ஸ் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை லதா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து கண்காணிக்காத வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மேரி ஜோசப் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் செங்குன்றம் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.