திருநெல்வேலி: மந்திரிக்கு சபாநாயகர் கடிதம்
தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று (அக்.,12) மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நெல்லை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் காவல் கிணறு சந்திப்பு அருகிலும் தெற்கு வள்ளியூர் சந்திப்பில் நெல்லையில் இருந்து கன்னியாகுமரி வரையான நான்கு வழிச்சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என கூறி உள்ளார்.