தென்மேற்கு பருவக்காற்று சீசன் நீடிக்கும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி இந்த சீசனில் ஏற்ற இறக்கமாக உள்ளது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி 4158 மெகாவாட் காற்றாலை மூலம் மின் உற்பத்தியானது. அதற்கு அடுத்த நாள் 2565 மெகாவாட்டாக சரிந்தது. இந்த நிலையில் இன்று பகல் முதல் பகலில் வெயில் அடித்தாலும் காவல்கிணறு பகுதியில் இரவு நேர காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் ஏறுமுகமாக உள்ளது.