தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழையை முன்னிட்டு பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, “பள்ளிகளின் மின் இணைப்புகள் கண்காணிப்பது, வடிகால்கள் சுத்தம் செய்து திறந்தவெளி கால்வாய்களை மூட வேண்டும்” என எச்சரித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய உள்ளது.