திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள தெற்கு பெருங்குடியை சேர்ந்தவர் மாணவி லிவின்ஷா. பிளஸ் ஒன் படித்து வரும் இவர் இசை துறையில் சாதனை படைத்து வரும் இசையாசிரியர் அப்துல் கலிமிடம் கடம் பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று ஆணி இருக்கையில் அமர்ந்து 2 மணி நேரம் லிவின்ஷா கடம் வாசித்தார். தமிழ்நாட்டில் ஆணி இருக்கையில் அமர்ந்து மாணவி கடம் வாசித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆணி இருக்கையில் இருந்து அசத்திய இந்த மாணவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.