பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், “திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மத்திய அரசு மீது குற்றம்சாட்ட, திட்டமிட்டு திமுக ஒரு கருத்தை பரப்பி வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தின்போது 5 பேர் உயிரிழந்தனர். அதனைப் பற்றி எதுவுமே வெளியே வரவில்லை. இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ரயில் விபத்தை வைத்து திமுகவினர் தற்போது நாடகமாடி வருகின்றனர்” என்றார்.