திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மணலிவிளை ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் சிகர நாளான நேற்று இரவு மகளிர் பங்கேற்ற மாபெரும் விளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாம்பூல தட்டுகளில் மாவிளக்குகளை தீபம் ஏற்றி கைகளில் ஏந்தியவாறு சிறுமியர் சுமங்கலி பெண்கள் அனைத்து தரப்பினரும் ஊர்வலமாக வந்தனர். முத்தாரம்மன் கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம் மெயின் ரோடு வழியாக வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.