செயற்கைக்கோள் இணைய ஸ்பெக்ட்ரமை நிர்வாக ரீதியாக ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு RELIANCE எதிர்பு தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரத்தை நேரடியாக ஒதுக்கினால், எலான் மஸ்க்கின் STARLINK நிறுவனம் இந்தியாவில் எளிதாக நுழைய வழிவகுக்கும். இதனால், ஏலம் முறையை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு RELIANCE அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.