திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தலைவியாக அதிமுகவை சேர்ந்த ஜான்சி ராணி உள்ளார். அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு நேற்று நடைபெற இருந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் திமுக கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் பரபரப்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் முறையாக நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.