நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது மாவட்டத்தில் உள்ள இளம் சாதனையாளர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.