நெல்லையில் காலி குடங்களுடன் போராட்டம்

61பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி 41வது வார்டு பகுதியில் பாரதி நகர், காவலர் குடியிருப்பு, அப்பல்லோ காலனி, விஜிபி நகர், சாரால் நகர் மையன்யோ, நேரு நகர், சண்முகா நகர், ஜமால் நகர், பொதிகை நகர், கிழக்கு மற்றும் மேற்கு பகுதி காருண்யா நகர், நேதாஜி தெரு, விரிவாக்கம் கேஎல்என் காலனி போன்ற பல்வேறு பகுதிகள் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்தப் பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க முடியாத சூழ்நிலையில் தற்போது எல்கேஎஸ் டேங்கில் இருந்து தியாகராஜ நகர் பகுதியில் 500 வீடுகளுக்கு மேலாக உள்ள இடங்களுக்கு குடிநீர் வழங்க முயற்சி நடைபெற்ற வருவதாகவும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள பகுதிகளுக்கு முறையாக சீரான குடிநீர் ஒருநாள் விட்டு ஒரு நாள் வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி நேற்று(செப்.6) மாலை 5 மணி அளவில் ஜெப கார்டன் சந்திப்பு பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பெருந்திரளான ஆண்கள், பெண்கள் காலி குடங்களுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநகராட்சி குடிநீர் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். பின்னர் மக்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி