திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தர மறுக்கிறார் பேரூராட்சித் தலைவர் ஜான்சி ராணி. இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என 6 வது கவுன்சிலர் கமலா நேரு தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர்கள் 12 பேர் இன்று (செப்.13) பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நிகழ்வின்போது ஏராளமான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதனால் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.