அவதூறாக பேசிய எச்.ராஜா: எஸ்.பி.யிடம் புகார் அளித்த எம்.பி
ராகுல் காந்தியை அவதூறாக பேசிய எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (செப்.,21) திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.