நாங்குநேரியில் அதிகபட்சம் மழை பதிவு
திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் இன்று(அக்.22) பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 20 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணைப்பகுதியில் 18. 6 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.