திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ரத்த வங்கி காலை 10 மணி ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அவசர தேவைக்கு குருதி அளிக்க வரும் சமூக ஆர்வலர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், 12 மணிக்கு மேல் ரத்தம் வாங்குவது இல்லை எனவும் குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.