தமிழ்நாட்டு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் - கனிமொழி

67பார்த்தது
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சை மேற்கோள்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப்‌ பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

நன்றி: News18TN