குளச்சல் - Kulachal

குலசேகரம்: நண்பன் இறந்த சோகத்தில் மாணவன் தற்கொலை

குலசேகரம்: நண்பன் இறந்த சோகத்தில் மாணவன் தற்கொலை

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மகன் அபிசேக்பால் (21) இவர் அருகே உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி. எஸ். சி நர்சிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் இவரது நண்பர் ஒருவர் விபத்தில் இறந்ததாகவும் அதனால் இவர் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பூதப்பாண்டியை அடுத்துள்ள தெப்பக்குளம் அருகே ஏதோ விஷம் குடித்து மயங்கிய நிலையில் சாலையோரமாக படுத்துள்ளார். பொதுமக்கள் இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு அவரை மீட்டு முதலுதவிக்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்கள். இந்த தகவலறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். சிகிச்சை பலனின்றி இன்று (7-ம் தேதி) அவர் பரிதாபமாக இறந்துள்ளார் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా