குமரி: 200 கிராமங்களில் மனித சங்கிலி போராட்டம்

83பார்த்தது
குமரி மாவட்டம் மனவளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை உள்ளது. இந்த ஆலை மூலம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்பட்ட கடற்கரை  பகுதிகளில் இருந்து மணல் எடுப்பதாக தகவல் வெளியானது. இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மணலாலையை மூட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில், குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இன்று காலை மனித சங்கிலி போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது.  

அதன்படி இன்று (20-ம் தேதி) குளச்சலில் நடந்த போராட்டத்தை பிரான்ஸ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். முன்னதாக புனித காணிக்கை அன்னை திருத்தலம் முன்பாக மீனவர்கள் புறப்பட்டு பீச் சந்திப்பு வரை பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். இது போன்று மாவட்டத்தில் குறும்பனை, தேங்காய்பட்டணம் இனயம், மனவளக்குறிச்சி கொட்டில்பாடு உட்பட 200 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி