குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி 4வது வார்டுக்கு உட்பட்ட காஞ்சிரவிளை ஊர் பகுதியில் முதியவர் ஒருவர் இன்று (6-ம் தேதி) மரணம் அடைந்தார். உடலை அடக்கம் செய்ய மழைநீர் வடியாத கிராமத்து சாலையில் பல கிலோ மீட்டர் தூக்கி சென்று அடக்கம் செய்தனர்.
இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் கண்டுகொள்ளவில்லை என புகார் கூறப்படுகிறது. இதே வழியாகத்தான் தினமும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் சென்று வருகிறார்கள்.
மழை நேரத்தில் இந்த பகுதியில் சாலையில் மழை நீர் தேங்கி பெரும் பிரச்சனையாக இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.