குமரி மாவட்டத்தில் நேற்று முதல் தேங்கா பட்டணம், குளச்சல், குறும்பனை தொட்டில் பாடு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்தன. இதில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய பலரின் விசைப்படகுகள் சேதமடைந்தது.
இதுபோல் தேங்காபட்டணம் அருகே உள்ள ஹெலன் காலனி பகுதியில் உள்ள குருசடி அருகில் சிறுவர்களுக்கான பூங்கா ஒன்று பொது மக்களால் உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் தினமும் அந்தப் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் ஏராளம் பேர் சென்று பொழுதை கழிப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றத்தில் அந்த சிறுவர் பூங்காவின் சில பகுதிகள் கடலில் அடித்து செல்லப்பட்டு மிகவும் சேதம் அடைந்துள்ளன. மேலும் அந்தப் பகுதியில் இன்றும் தொடர்ந்து கடல் சீற்றம் இருப்பதால் அந்தப் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.