மார்த்தாண்டம்:   மீன் பிடிக்க விரித்த வரையில் மலை பாம்பு

56பார்த்தது
மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியில் நெடுவாலிகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிப்பதற்கான வலை போட்டுள்ளார்.  

     பின்னர் நேற்று (2 -ம் தேதி) காலை வழக்கம்போல் வலையை எடுக்க முயன்ற போது மிகவும் சிரமப்பட்டு உள்ளார். அதிக எடை உள்ள பெரிய மீன் சிக்கி உள்ளது என நினைத்து கடுமையாக முயற்சி செய்து உள்ளார். வலை வெளியே வர ஆரம்பித்தபோது சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

       உடனே ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் வனத்துறை மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் வீரர்கள் வந்து மலைப்பாம்பை பிடித்து வன துறையிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி