குமரி மாவட்டம் மார்த்தாண்டம், வெட்டுமணியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரியை கிள்ளியூர், விளவங்கோடு தொகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேசிய நெடுஞ்சாலையில் பாய்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் கடைகளும் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்திற்காக அங்கு வரும் பயணிகள் மற்றும் மருத்துவமனையின் உள் நோயாளிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சம்மந்தபட்ட துறையினர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.