மங்காடு:   ஆற்றில் அடித்து வரப்பட்ட வாலிபரின் உடல் மீட்பு

76பார்த்தது
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.   இதனை காண இன்று (25-ம் தேதி) புதுக்கடை அருகே மங்காடு  ஆற்றின் கரையில் நின்று ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை ரசித்து கொண்டிருந்தபோது ஒரு ஆண் சடலம் ஒன்று மிதந்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
      இதனையடுத்து ஊர் மக்கள் கொல்லங்கோடு தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீ அணைப்பு துறையினர் முதலில் மங்காடு பாலத்தில் வைத்து உடலை மீட்க முயன்றனர். அது முடியாமல் போக விரிவிளை கணபதியான்கடவு பாலம் பகுதிக்கு வந்து அங்கிருந்து படகு மூலம் ஆற்றின் உள்பகுதிக்கு சென்று மிதந்து வந்த உடலை மீட்டனர். ஆனால் அந்த உடல் மூன்று நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசி உள்ளது.
      இதனையடுத்து தீ அணைப்பு துறையினர் அந்த உடலை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். நித்திரவிளை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்?   ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா?   அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து ஆற்றில் எறிந்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி