குமரி மாவட்டம், பளுகல் பேரூராட்சிக்கு உட்பட்ட மணிவிளையில் நூற்றாண்டு பழமையான அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியை ஒட்டிய கேரள பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த நிறுவனம் அரசு பள்ளி நிலத்தையும், தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து செய்து கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கேரள நிறுவனத்தின் கட்டுமான பணிகளை தடுக்க கோரி நேற்று (22-ம் தேதி) அந்த பகுதியில் கவுன்சிலர் ஹரிகுமார் தலைமையில் பொதுமக்கள் திடீரென்று திரண்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குமரி மாவட்ட கலெக்டர், தமிழக அரசு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என கவுன்சிலர் ஹரிகுமார் கூறினார். பின்னர் தொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.