குமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவி உள்ளது. இந்த அருவியை காணவும், குளிக்கவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு விடுத்துள்ளது. இதற்கு இடையில் மலையோரப் பகுதிகளில் அதிக மழை பெய்ததால், குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதை அடுத்து நேற்று மாலை 6 மணி அளவில் பேச்சிப்பாறை அணையில் இருந்து கூடுதலாக 250 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை எடுத்து திற்பரப்பு அருவியிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று (15. ம் தேதி) காலை முதல் திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால் அருவினய பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.