திற்பரப்பு: அருவியல் 8 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி

69பார்த்தது
குமரி மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம் திற்பரப்பு அருவியாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை,   சிற்றார் அணைகளில் இருந்து மறுகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

      கடந்த 8 நாட்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று அணைகளின் மறுகல் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது நிறுத்தப்பட்டது. எனினும் நேற்று மழை பெய்து கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி நேற்று மதியம் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

     இதை அடுத்து பிற்பகல் சில கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சற்று குறைவாக விழும்  ஒரு பகுதியில் மட்டும் பயணிகள்  அனுமதிக்கப்பட்டனர். இ ன்றும் சுற்றுலா பயணிகள் காலை முதல் குவிந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி