பத்தமடை: சமூக ஊடக அணி மாவட்ட செயற்குழு கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட சமூக ஊடக அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்தமடை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் எஸ். பி. எம் கனி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஊடக அணி வளர்ச்சி மற்றும் மஞ்சோலை தொழிளார்களின் உண்மை நிலையை மக்களுக்கு தெரியபடுத்துவது, நெல்லை புறநகர் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் குறித்த உண்மை நிலையை மக்களுக்கும் அரசுக்கும் தெரியப்படுத்தும் விதமாக செயல்படுவது. பருவ மழை காலங்களில் ஏற்படும் விளைவுகளை உடனுக்குடன் வெளியிடுவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் ரபீக் வரவேற்புரையாற்றினார். சமூக ஊடக அணியின் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக முஸ்ஸம்மில் தேர்வு செய்யப்பட்டார். இறுதியாக ஜமால் நன்றி உரை கூறினார்.