டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு சந்தித்து கொண்டனர். சிம்பு மற்றும் தனுஷ் இடையே எப்பொழுதும் ஒரு பகை போட்டி இருக்கும் என திரையுலகில் இருப்பவர்கள் அறிந்ததே. ஆனால், அதை எல்லாம் பொய் என நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து விழாவில் கலந்துக் கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.