ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே ஆட்டோ மீது அரசுப்பேருந்து மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழை தோட்டத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.