நெல்லை தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் சங்கத்துறைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் நெல்லை கங்கைகொண்டானில் அனுமதி இன்றி கனிம வளம் கொண்டு சென்ற லாரி இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரெட்டையார்பட்டி பகுதியிலும் ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.