தெய்வானை யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

62பார்த்தது
தெய்வானை யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை தாக்கி உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி