தேனி: சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் பேவர் ப்ளாக் கற்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைக்கும் பணிகளை நகராட்சி நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.